தமிழ்நாடு காவல்துறையில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள்…

தமிழ்நாடு காவல்துறையில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள்…
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Tamilnadu Police

மொத்தப் பணியிடங்கள் : 10,978

துறை : காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர் ஆயுதப்படை) – 3784
  • இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) – 6545 
  • இரண்டாம் நிலை சிறைக்காவலர் – 119
  • தீயணைப்பாளர் – 458
  • பின்னடைவு காலிப்பணியிடங்கள் – 72

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2020

வயது வரம்பு : 01.07.2020-ன் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், திருநங்கைகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள்.

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnusrbonline.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *