Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு!

July 13, 2020

நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.

இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு குறைவான அளவிலேயே கிடைத்தாலும் மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் சந்தையில் கடன் வாங்கி செலவழித்து வருகிறது தமிழக அரசு. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி குறைவு, சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.

மண்ணுக்குள் 27.29 காரட் வைரம்! இந்தியாவில் கிடைத்த இரண்டாவது பெரிய ‘பொக்கிஷம்’ – எங்கே தெரியுமா?

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் அதிகரித்த ஒமிக்ரான் தொற்று… மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி எண்ணிக்கை!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டியில் மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய நிதி தாமதம் ஆவது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு, அரசின் மானியங்கள், செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் அதிகளவில் கடன் வாங்க வேண்டிய சூழலில் தமிழகம் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய மாநிலங்களிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, நடப்பு 2020-21ஆம் நிதியாண்டின் இதுவரையிலான காலத்தில் தமிழகம் மொத்தம் ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிகம் கடன் வாங்கிய இந்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, ஜூலை 7ஆம் தேதி 6.63 சதவீத வட்டியில் ரூ.1,250 கோடியைத் தமிழக அரசு கடனாக வாங்கியிருந்தது. இக்கடன் 35 ஆண்டு முதிர்வு காலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வாங்கியுள்ள மொத்தக் கடனில் தமிழகம் மட்டும் 17 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ.25,500 கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.17,000 கோடியும், ராஜஸ்தான் ரூ.17,000 கோடியும் கடனாக வாங்கியுள்ளன. மாநிலங்களின் மொத்தக் கடன்களில் மேற்கூறிய மூன்று மாநிலங்களின் பங்களிப்பு முறையே 14%, 9%, 9% ஆக உள்ளன.

வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் மேலும் அதிகமாகக் கடன் வாங்கும் நெருக்கடியில் தமிழகம் இருக்கிறது. நிதிச் செயலாளரின் கணக்கீட்டின்படி, தமிழகத்துக்கு மாதத்துக்கு ரூ.13,000 கோடி வரையில் வருவாய் இழப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ராஜஸ்தான் அரசியல்: அசோக் கோலட்டுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு – சுர்ஜ்வாலா தகவல்

Next Post

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் சந்திப்பு!

Next Post

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version