புதிய வகை கொரோனா பாதிப்பு: குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த பெண்

புதிய வகை கொரோனா பாதிப்பு: குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த பெண்

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.

ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நேற்றுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.தற்போது 5 ஆக உயர்ந்து உள்ளது. ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *