இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொதுகலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொதுகலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதற்கான அட்டவணையை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (TNEA) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றது. மொத்தம் 1,10,873 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி, 1 முதல் 12 ஆயிரத்து 263 தரவரிசையில் அதாவது (கட்-ஆப் 199.667 முதல் 175 வரை) இருக்கும் மாணவர்களுக்கு 8(இன்று)ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும், 12 ஆயிரத்து 264 முதல் 35 ஆயிரத்து 167 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 174.75 முதல் 145.5 வரை) உள்ள மாணவர்களுக்கு 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், 35 ஆயிரத்து 168 முதல் 70 ஆயிரத்து 300 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 145 முதல் 111.75 வரை) இருப்பவர்களுக்கு 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும், 70 ஆயிரத்து 301 முதல் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 தரவரிசை(கட்-ஆப் 111.5 முதல் 77.5 வரை) வரையில் உள்ளவர்களுக்கு 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதில் மாணவர்கள் முன்பணம் செலுத்துதல், விருப்ப கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் அதனை இறுதி செய்தல் போன்றவற்றை செய்தபின்னர் இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *