அரியலூர் – பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை

அரியலூர் – பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை

அரியலூர் மாவட்டம் புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூத்த இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபிபுல்லா தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது வெளியே வந்து பார்த்தபோது 3 பெட்ரோல் பாட்டில்களும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா இது குறித்து ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மேலும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரொஸ்கான் அப்துல்லா நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *