Saturday, October 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

Seithialai desk by Seithialai desk
July 15, 2025 5:51 PM GMT+5:30

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெரினா பேகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் மரணம் அடைந்து விட்டார் எனது மகள் திருமணத்திற்கு வாங்கிய நகைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக அடுத்த நாள் சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரில் 92 சவரன் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை நகையை மீட்க எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. 

லடாக்கிற்கு தனி உயர்நீதிமன்ற அமர்வு; குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

பின்னர் 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். அந்த மனுவை திருவல்லிக்கேணி துணை ஆணையர்க்கு அனுப்பியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது. நான் பல முறை சூளைமேடு  காவல் நிலையம் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போதும் எந்த தகவலும் இல்லை. இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை, நகையை மீட்கவும் இல்லை. காவல்துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டது. சுமார் கடந்த 8 ஆண்டுகளாக நகையை மீட்க எந்த நடவடிக்கையும் சூளைமேடு காவல்துறை எடுக்கவில்லை எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணை மாற்ற வேண்டும் என மனுவில் கோரினார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முகமது சபீத், நகையை மீட்பது தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். கடந்த 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை சூளைமேடு காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரகினர். அப்போது நீதிபதி குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக முறையாக பயிற்சியை காவல்துறையினருக்கு அரசு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு முறையாகப் பயிற்சி இல்லமால் இருக்கும் கடமையை செய்ய தவறிய காவல் அதிகாரிகளை நீதிமன்றம் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் நடைபெற்ற காலத்திற்கு பிறகு சூளைமேட்டில் அதிக காலம் ஆய்வாளராக பணியாற்றி தற்போது சென்னை சென்ட்ரல் இரயில்வே இரும்பு பாதை உதவி ஆணையர்  பணியாற்றி வரும் கர்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு உத்தரவிட்டர். மற்றும் 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பிக்கு  உத்தரவிட்டார். இதே போன்று சேலம் மாவட்டம் வீராணம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக அளிக்க பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரிய வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. 2018 முதல் தற்போது வரை வீராணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, குற்ற வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பிக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

Next Post

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக – இபிஎஸ்

Next Post

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக - இபிஎஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version