தென் தமிழகம், டெல்டா பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், டெல்டா பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (புதன்கிழமை), (5.01.2023) தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். (6.01.2023 முதல் 7.01.2023) வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *