தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில், லேசான மழையும், சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு, கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *