சென்னை அயனாவரத்தில் பரபரப்பு… பிரபல ரவுடி என்கவுண்டர்…

சென்னை அயனாவரத்தில் பரபரப்பு… பிரபல ரவுடி என்கவுண்டர்…
கடந்த சில நாட்களாக தமிழக போலீசின் அதிரடி தொடர்ந்து கொண்டு இருக்கிறது, கடந்த செவ்வாய் கிழமை தூத்துக்குடியில் பிரபல ரவுடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அந்த ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு தாக்கி காவலர் சுப்பிரமணி மரணம் அடைந்தார்.

அவர் கையில் இருந்த இன்னொரு குண்டு வெடித்ததில் ரௌடியையும் இறந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில் சென்னை அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிரபல கஞ்சா வியாபாரியான சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார்.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது பல கொலை முயற்சி வழக்குகளும், கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.ரவுடி சங்கர் வெட்டியதில் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *