காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதம்.பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு.
மாவட்டங்களுக்குள் அல்லது மண்டலங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படலாம் என தகவல்.ஊரக பகுதிகளை தொடர்ந்து சில இடங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்க வாய்ப்பு.
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல்.சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை.பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்க வாய்ப்பு.சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட வாய்ப்பு.