கோவை தமிழ் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

கோவை தமிழ் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

பேரூர் தமிழ்கல்லூரியில் பேராசிரியர் திருநாவுக்கரசு மீதான பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் கல்லூரி வளாக குறைதீர்ப்பு குழு கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூரில் உள்ள தமிழ் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் திருநாவுக்கரசு என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி வளாக குறைதீர்ப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் புகார் அளித்த மாணவர் கொடுத்த வீடியோ பதிவுகள் ஒன்றேகால் மணி நேரம் இருப்பதாகவும், புகார் அளித்த மாணவரிடம் விசாரித்த போது மூன்று மணி நேரத்திற்கும் மேல் வீடியோ இருப்பதாக தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

முழுமையான வீடியோவை புகார் அளித்த மாணவர் கொடுக்காததால் இந்த பாலியல் தொல்லை விவகாரம் குறித்து முடிவுக்கு வர முடியவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் பதவிற்கான போட்டியில் இருந்து திருநாவுக்கரசை விலக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடும் விதத்தில் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளதாக இந்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் திருநாவுக்கரசு பதற்றத்தில்தான் அந்த வீடியோவில் தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புக்கொண்டார் எனவும் சம்மந்தப்பட்ட மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது அந்த ஸ்கிரின் ஷாட் தன்னுடையது அல்ல எனவும் , பேராசிரியர் தனக்கு எந்த தொந்தரவும் அளிக்கவில்லை என மாணவி விசாரணையில் தெரிவித்து இருப்பதாவும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு இந்த கமிட்டியானது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *