Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

காவல்நிலையம் சூரை, ஆர்.பி.உதயகுமார் கைது, எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

June 14, 2025

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாததை தான் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சூரையாடப்பட்டது. இந்தத் தாக்குதலில் காவலர் ஒருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

இதனையடுத்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று இக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுத்ததையடுத்து அவர் தர்னாவில் ஈடுபட்டார். இதனால் காவல்துறையினர் ஆர்.பி.உதயகுமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எகஸ் பக்கத்தில்,

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை.

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான்.

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.

V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு என்று தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை

Next Post

நீட் தேர்வு முடிவுகள்

Next Post

நீட் தேர்வு முடிவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version