Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

ஐயா இந்த பெமினிசம்-னு சொல்ராங்களே அப்டின்னா என்னங்கய்யா!

November 1, 2020
நாமளும் பிக் பாஸ் கஞ்சா கருப்பு அண்ணன் மாதிரி தான் கேக்கவேண்டியதா இருக்கு..எங்க பாத்தாலும் இந்த பெண்ணிய வாதிகள் வந்துட்டாங்க..வாங்க இன்னிக்கே இந்த பஞ்சாயத்தை முடிச்சுடுவோம்
fem

இப்போல்லாம் பெண்ணியம் அடிக்கடி கேக்கற வார்த்தையாகி போச்சு. தப்பி தவறி ஏதாவது கேட்டுட்டா உடனே வந்துடறாங்க..’நான் ஒரு பெண்ணியவாதி..என்ன பாத்து அப்படி ஒரு கேள்வி நீங்க கேக்கலாமா?’. நேர்ல மட்டும் இல்ல, பேஸ்புக், இணையதளம்னு எங்க பாத்தாலும் இது நடக்குது! பெண்ணியம் அப்டின்றது உண்மையில என்ன?

பல வருஷமா வெளி உலகத்த பாக்காம சமையல் அறைக்குள்ளேயே அடைஞ்சிருந்த பெண்களுக்கு குரல் கொடுக்கணும்னு வந்த நல்ல விஷயம் தாங்க பெண்ணியம். இன்னிக்கு அதோட அர்த்தமே பாதி பேருக்கு தெரியல என்பது தான் உண்மை…ஆண் வர்கத்தை தாழ்த்தி பெண்கள் தான் எல்லாருக்கும் மேலே-னு சொல்றது தான் பெண்ணியம் னு நெனச்சிட்டு இருக்காங்க..

பஸ்ஸில் இதெல்லாம் செய்யக் கூடாது ஆண்களுக்கு எச்சரிக்கை

உன் மார்பில் என் பெயரை பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் காதலன் கொடுத்த டார்ச்சர்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையம்

இவங்க அளப்பர தாங்கமுடில…இவங்க எப்படி வேணுனாலும் துணி போடுப்பாங்களாம்…கேட்டா பெண்ணியம் னு சொல்லுவாங்களாம்..நாம நமக்காக தான் உடை போட்டுக்கறோம்..யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னாலும்..அது கலாச்சார சம்மந்தப்பட்ட விஷயம் ..பெண்ணியம் கெடையாது..ரெண்டையும் போட்டு கொழப்பறாங்க

இது கூட பரவால்ல…ஆண்கள் பண்ற எல்லாத்தையும் நாங்களும் பண்ணுவோம் னு கெளம்பிருக்காங்க ஒரு குரூப் ..அதுல என்ன அவ்வளவு பெருமை? நீங்களே உங்கள அவங்களுக்கு கீழ னு நெனச்சிருக்கீங்க னு தானே அர்த்தமாகுது?

பெண்கள் செய்யற ஒரு சில விஷயங்கள் ஆண்களால நெனச்சு கூட பாக்க முடியாது தெரியுமா? தனித்துவமான குணத்தையெல்லாம் ஏன் கொண்டாட மாட்டேங்கறாங்க அப்படினு தான் புரியல..எல்லாருமே ஒரே மாதிரி ஆயிட்டா எதுக்கு இவளோ பேர் உலகத்துல?

இதுல என்ன இன்னோரு கொடுமைன்னா…பெண்ணியம் ஒரு பொதுவான வட்டம் கெடையாது….வெளி நாடுகளில் இருக்கற புரிதல் வேற..வாழ்க்கை வேற..அவங்களோட பெண்ணியமே வேற..அதை புரிஞ்சுக்காம அத அப்படியே இந்தியாவுல கடைபிடிக்கலாமா?

இப்போல்லாம் கல்யாணம் பண்ணிக்கலையா னு கேக்கவே பயமா இருக்கு..உடனே கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்..பண்ணாலும் கர்ப்பம் ஆகமாட்டேன் அப்படி இப்படினு சொல்றாங்க..நிஜமாவே இவங்களோட விருப்பமா…இவங்களோட சூழ்நிலை காரணமா எடுத்த முடிவு தானா இல்லைனா எல்லாரும் பன்றாங்க நாமளும் பண்ணலாமே னு பண்றாங்களானு தான் புரியல நமக்கு…

உண்மையில் பெண்ணியம் ரொம்ப சாதாரணமான விஷயம்..இன்னும் சொல்லனும்னா பெண்களுக்கு மட்டுமே பொருந்துவது கெடையாது..ஆண்களுக்கும் பொருந்தும்

சுருக்கமா சொல்லனும்னா பெண்கள் அப்படின்ற காரணத்துக்காக ஒதுக்கப்படாம இருக்கணும்..அவ்ளோதான்.

நீயே ஒரு பொண்ணு..நீ ஏன் இதுல தலையிடுற னு கேக்கறாங்க பாருங்க..அவங்கள எதிர்க்கறது தாங்க பெண்ணியம்

பண விஷயத்துல நீ எதுவும் பேசாதே..நான் பாத்துக்கறேன் னு அடக்கற நெலம இன்னும் எவ்வளவு வீடுகள்-ல நடக்குது தெரியுமா? அத விடுங்க..குழந்தை வளக்கறதுல..ஸ்கூல், காலேஜ், படிப்பு இதுல எடுக்கற முடிவுகள் வரைக்கும் ஒரு முக்கியமான விஷயம்-னா கலந்து ஆலோசிக்க கூட சில பெண்களுக்கு வாய்ப்பு கெடைக்கிறதில்ல…

இதெல்லாம் சரி செய்யறது தாங்க பெண்ணியம்…முடிவு எடுக்கறது, வேலைல பதவி உயர்வு..இதெல்லாம் தனி மனித திறமையே தவிர இதுல பெண்ணா ஆணா என்ற கேள்விக்கே இடமில்லை

மனதுக்கு பிடிச்சருக்கா அதை பண்ணுங்க..நாம பெண்ணாச்சே இத பண்ணா உலகம் தப்பா பேசுமே னு பயப்படாம பண்ணுங்க…இது ஆண்களுக்கும் அப்படிதான்..ஆண்கள்-னாலே இப்படி தான் இருக்கணும் னு சமூகத்துல போட்ட வரையறை எப்போதுமே சரி வரும்னு சொல்லமுடியாது..அதை உடைத்தெறிய தயங்க வேண்டாம்

இவ்வளோ சுலபமான விஷயத்தை கலாச்சாரம், சமூக விதி மீறல்கள் இதோட போட்டு கொழப்பி, பெண்ணியம் பேசறது என்றாலே ஆண்கள் எல்லாரும் பத்து அடி தள்ளி போக வெச்சுட்டாங்க

ஆண்கள் அழ கூடாதுனு எவன் சொன்னான்? பெண்களுக்கு வண்டி ஓட்ட தெரியாதுன்னு யார் சொன்னா?

போங்க..போய் எல்லாரும் ஒண்ணா நிம்மதியா வாழற வழிய பாருங்க…தனித்துவத்தை கொண்டாடுங்க!

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமைச்சர் ஜெயக்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!!!

Next Post

ஐஸ்வர்யா ஒரு பேரழகி….. எட்டாவது அதிசயத்தின் சாதனைகளும், சர்ச்சைகளும்! ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் சிறப்பு செய்தி…..

Next Post
Aishwarya raai

ஐஸ்வர்யா ஒரு பேரழகி..... எட்டாவது அதிசயத்தின் சாதனைகளும், சர்ச்சைகளும்! ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் சிறப்பு செய்தி.....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version