மகாத்மா காந்தியின் கண்ணாடி சுமார் ரூ. 2.5 கோடிக்கு ஏலம்!!!

மகாத்மா காந்தியின் கண்ணாடி சுமார் ரூ. 2.5 கோடிக்கு ஏலம்!!!
மகாத்மா காந்தி அவர்கள் 1910-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார், அப்போது ஒரு மூக்கு கண்ணாடியை ஒருவருக்கு மகாத்மா காந்தி பரிசாக கொடுத்துள்ளார்.அந்த கண்ணாடி இப்போது ஏலத்திற்க்கு விடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

இந்த கண்ணாடி 10 லட்சம் முதல் முதல் 15 லட்சம் வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம் ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார்.

இந்த மூக்கு கண்ணாடியை இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த மூக்கு கண்ணாடியை ஏலத்தில் வாங்கி உள்ளார். ஆனால் அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *