20 வருடமாக என்ஜினியரிங் படிப்பில் அரியரா? அண்ணா பல்கலை., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

20 வருடமாக என்ஜினியரிங் படிப்பில் அரியரா? அண்ணா பல்கலை., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001-2002ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3வது பருவத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத செப்.24ஆம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுத விரும்புவோர் https://coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் குறித்து அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *