11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

அரசுப்பள்ளியில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்குதலில் 6 மாத குழந்தை பலி! - Pagetamil

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தை ஒன்று கழிவறை அருகே தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் புவனகிரி காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கியதும், அந்த மாணவி கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்து புதரில் வீசியதும் தெரியவந்தது. குழந்தை  பெற்ற அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பமாக்கிய அந்த மாணவர், அந்த மாணவியின் ஊரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *