சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் & நண்பர்கள் வீடுகளில்  தேடினர். அவ்வாறு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து  பவானி காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், பவானியில், தனியார் உணவகத்தில் தங்கி வேலைபார்க்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கட்டாயத் திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *