VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு…

VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு…

புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு கியூட்டாக டான்ஸ் ஆடும் குட்டிதேவதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக ’சாமி’ என தொடங்கும்  பாடலுக்கு ராஷ்மிகா  சிறப்பான நடனத்தை வெளிபடுத்தியிருப்பார். இந்த பாடல் குட்டீஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில், குட்டி வாண்டு ஒன்று இந்த பாடலுக்கு கியூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ, இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா, அந்த கியூட்டியை (குட்டி வாண்டை) பார்க்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *