ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து டேவிட் வார்னர் புதிய சாதனை

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து டேவிட் வார்னர் புதிய சாதனை
ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை ஆஸ்திரேலிய வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 201 ரன்கள் குவித்தது.

இதில் வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. வார்னர் 40 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து புதிய சாதனையை வார்னர் படைத்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.
வார்னருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 5 சதங்களுடன் 42 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.


சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா 1 ஒரு சதத்துடன் 39 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சதத்துடன் 39 முறையும், பெங்களூரு அணி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 3 சதங்களுடன் 38 முறையும் ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *