Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

அரசைக் கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு கடிதம்

October 12, 2020
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செயல்படுவதாக கூறி தலைமை நீதிபதிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
andhra

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியேற்றது. ஜெகன்மோகன் ரெட்டி அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு எதிராக மாநில ஐகோர்ட்டு சுமார் 100 உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

தனது அரசின் திட்டங்களுக்கு ஐகோர்ட்டு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போடுவதால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, இவற்றின் பின்னணியில் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக கருதுகிறார். குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி மூலம் மாநில ஐகோர்ட்டு நடவடிக்கைகளை அவர் கட்டுப்படுத்துவதாக ஜெகன்மோகன் ரெட்டி எண்ணுகிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறு எதிரொலி… வன்முறை மூளும் அபாயம்!!

“பார்த்த உடனே புல்லரிச்சு போச்சு“ : ஆந்திராவில் பிடிபட்ட 20 அடி நீள ராஜநாகம்!!

கருத்தரிக்காமலேயே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி நாடகமாடிய பெண்

இதை உறுதி செய்யும் வகையில் முந்தைய தெலுங்குதேசம் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதித்துள்ள ஐகோர்ட்டு, அது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் விரக்தியடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மற்றும் மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 6-ந்தேதி எழுதிய அந்த கடிதத்தின் நகலை அவரது முதன்மை ஆலோசகர் அஜெயா கல்லம் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த கடிதத்தை 8-ந்தேதி ஜெகன்மோகன் ரெட்டி அனுப்பியதாக அவர் கூறினார். அந்த 8 பக்க கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:-

ஜனநாயக நிறுவனங்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மூலம் சந்திரபாயு நாயுடு, அரசியல்மயமாக்குவது மிகுந்த வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஒருவர் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆதாரம் இருக்கிறது. தற்போது மாநில நீதித்துறையில் அவரது தலையீடு இருப்பதன் மூலம் அது தெளிவாகி இருக்கிறது.

இதன் மூலம் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மைகள் புலப்படும்.

எனவே மாநில நீதித்துறையின் நடுநிலைமை தொடர்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு எதிராக மாநில முதல்-மந்திரி ஒருவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

ஜெகன்மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது முதல்-மந்திரி கூறியுள்ள குற்றச்சாட்டை தெலுங்குதேசம் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான ராமகிருஷ்ணுடு, ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஜெகன்மோகன் ரெட்டி மீது 43 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. அவரது ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இப்படி தீவிர குற்றச்சாட்டுகளை கொண்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்தவர்களை பற்றி கூற எந்த தகுதியும் இல்லை. இது சாத்தான் வேதம் ஓதும் கதையாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

மக்கள் தங்களுக்கு பணி செய்வதற்காக கொடுத்த அதிகாரத்தை தனது சுயநலத்துக் காக ஜெகன்மோகன் ரெட்டி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய ராமகிருஷ்ணுடு, சி.பி.ஐ. கோர்ட்டில் தன் மீதான ஊழல் வழக்குகள் தினசரி விசாரணைக்கு வர இருக்கும் நேரத்தில், நீதித்துறையை அவமதிக்கும் முயற்சி இது எனவும் கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் – சிதம்பரம் கருத்து

Next Post

“தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும்” – கடம்பூர் ராஜு

Next Post

"தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும்" - கடம்பூர் ராஜு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version