நடிகர் நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆர்.ஆர்.ஆர் நகர் சிரா சட்டசபை தொகுதிகளுக்கன இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் தர்ஷன்,நடிகை அமுல்யா ஆகிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி:
மண்டியா பாராளுமன்ற தேர்தல் மற்றும் இந்த இடைத்தேர்தலும் ஒன்றில்லை; பாஜக கட்சியினர் சினிமா நடிகர், நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியாது.
எனது தலைமையிலான கூட்டணி அரசை கழிழ்த்தது யார் என்று இப்போது விவாதிக்க வேண்டாம்! பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு சிராவில் ஜனதா தளம் வெற்றி பெற முடியாது எனக் கூறுகிறார்கள். பாஜாக கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். எனத் தெரிவித்துள்ளார்.
இவரது மனைவி பிரபல நடிகை ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.