இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய் !

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய் !
செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.
marsearth

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40கோடியே 13லட்சம் கி.மீ ஆகும். இதில் இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது என்றும். அதன்பிறகு இன்றும் 13 ஆண்டுகள் கழித்துதான் இந்த நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது.

marsearth

இந்த நிகழ்வு குறித்து இந்திய கோள்கள் சமூகத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியதாவது, வருகிற 14-ம் தேதி பிற்பகல் 2.56மணிக்கு செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும். நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும்

பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கும் மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். குறிப்பாக பல வாரங்களுக்கு இப்படி பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு நேரமாக இருந்தால், நமது தலைக்கு மேலே காணமுடியும். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது, ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமா தெரியும் என்று ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *