மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அடிக்க போகிறது ஜாக்பாட்!!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அடிக்க போகிறது ஜாக்பாட்!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வை ஃபை வசதியை வரும் 2021ஏப்ரலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இரண்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 24 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை அந்த வழித்தடத்தில் பெரும்பாலும் மொபைல் போன்கள் சிக்னல் கிடைபதில்லை இதனால் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

எனவே,அதை நிவர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் வை ஃபை இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பயணிகள் இலவசமாக இணையவழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 45 கி.மீ. வழித்தடங்களில் ஆப்டிக்கல் ஃபைபா் கேபிள்களை நிறுவும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்தத் திட்டத்தில் கேபிள்கள் மற்றும் அணுகல் புள்ளிகளை நிறுவுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் மேலும் இதற்கான பணிகள் தினசரி ரயில் இயக்கம் முடிந்தபிறகு, இரவில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நடைபெறும். பயணிகளுக்கு இணையதளம் பயன்படுத்துவது வரம்பற்ற காலமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இருக்குமா என்பது குறித்து இன்னும் தீா்மானிக்கப்படவில்லை” என்று கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *