மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!!!

மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!!!
பிரதமர் நரேந்திர மோடி “மான் கி பாத்”என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய “மான் கி பாத்” நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

பண்டிகை காலம் களைகட்ட தொடங்கி உள்ளதல் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அதிக எச்சரிக்கையுடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். மேலை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில்கூட ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது அதை போல விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது என்றும்.

இந்த ஆண்டு நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவது சிறப்பானதாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டுகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும் எனவும்

வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும் என்றும், மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன எனவும், ஊட்டச்சத்து தொடர்பான போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *