மும்பை கட்டடிட விபத்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு…

மும்பை கட்டடிட விபத்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு…
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் அடுத்த பிவண்டியில் ஜிலானி என்ற இடத்தில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர்.

இங்கு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. அதிர்வை உணர்ந்து கண் விழிக்கும் முன்பே பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

கட்டிடம் இடிந்த சத்தம்கேட்டு எழுந்து வந்த அப்பகுதி மக்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வந்தனர், மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட 13 பேரின் உடல்களை மீட்டனர்.
மேலும் இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 20 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இன்று காலை மேலும் 4 பேரின் உயிரற்ற உடல்களை மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இதனை யடுத்து கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என தானே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *