பெயர் வெச்சாச்சு!!சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள் -முதல்வர் உத்தரவு

பெயர் வெச்சாச்சு!!சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள் -முதல்வர் உத்தரவு

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் சூட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோமீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

கட்டம்-2ல் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான மூன்று வழித்தடங்கள் மற்றும் 128 மெட்ரோ நிலையங்களுடன் 61,843 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் – கட்டம்-1-ன் கீழ், ஆலந்தூர், சென்ட்ரல் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ –என்பது, `அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும், சென்ட்ரல் மெட்ரோ என்பது `புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்றும்,

ஜெயலலிதா அவர்கள் ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது `புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *