அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்விக்கு வாய்ப்பு

அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்விக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்விக்கு வாய்ப்பு உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்விக்கு வாய்ப்பு உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் கட் ஆப்
மொத்தம் 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என நிர்ணயித்துள்ளது என்.டி.ஏ. எனும் தேசியத் தேர்வு முகமை. ஒருவர் “நீட்”டில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற கருத்து மாணவ – மாணவியரிடையேயும், பெற்றோரிடையேயும் பரப்பப்பட்டிருக்கிறது.
ஆனால் அது உண்மையல்ல. அதன் மூலம் எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பம் போட மட்டுமே அந்த மாணவர் தகுதி பெற்றவர் ஆகிறார். அவ்வளவுதான். அதாவது, நீட் தேர்ச்சி என்பது ஜஸ்ட் பாஸ் ஆவதைப் போல.

4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு
இந்த ஆண்டு நீட் “கட்-ஆஃப்” மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களில் “நீட்” தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது அந்த நாளேடு.

அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.
ரத்து
இனியேனும் நீட் தேர்வு முறைக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள். தமிழக மாணவ – மாணவியரின் மருத்துவக் கனவு நிறைவேற , “நீட்”, ரத்து செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *