பல்வேறு வகை மாற்றங்களுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

பல்வேறு வகை மாற்றங்களுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் கூட கடந்த மே மாதம் 23-ந்தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் இரு தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்ற காரணத்தால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 1952-ம் ஆண்டுக்குப்பிறகான நாடாளுமன்ற வரலாற்றில் ஏராளமான முதல்முறை நிகழ்வுகளை வருகிற கூட்டத்தொடர் காண உள்ளது.

இதில் முக்கியமாக மாநிலங்களவை அறையில் 51 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் 60 உறுப்பினர்களும், மீதமுள்ள 132 பேர் மக்களவை அறையிலும் அமர்த்தப்படுவார்கள்.

ஏ.சி. வசதி கொண்ட அறைகளில் வைரஸ், பாக்டீரியா அச்சுறுத்தலை எதிர்கொள்ள புற ஊதா போன்ற கிருமிநாசினி கதிர்வீச்சு பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

வழக்கமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், ஒரு அவை காலையிலும், மற்றொரு அவை மாலையிலும் இயங்கும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *