மைனர் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி துன்புறுத்திய காவலர்!!

மைனர் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி துன்புறுத்திய காவலர்!!

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கும் போது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

காவலர் விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் பிரதீப் குமவத் அளித்த புகாரின் படி, இந்த போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமிக்கு பாலியல் வீடியோக்களை அனுப்பி துன்புறுத்தி வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் சார்பில் குமவாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த அஜ்மீர் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் சந்திர சர்மா, நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர் மீது ஐடி சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *