Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: பிரபல ரவுடி கொலையில் வாலிபர் கைது

November 22, 2020
கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம். பிரபல ரவுடி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவில் ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து, 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நத்தம் களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விமல் இவர் மீது கொலை, 2 கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு விமல், சுமார் 10 மணியளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது, செங்கல்பட்டு கேகே தெருவை சேர்ந்த சுரேஷ் உள்பட 2 பேர் அங்கு சென்றனர்.

தூங்கி கொண்டிருந்த விமலை, ஆட்டோவில் அழைத்து கொண்டு வெளியே சென்றனர். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் தனியார் திரையரங்கம் அருகே சென்றபோது, ஆட்டோவில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து, விமலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலை, முகம், கழுத்து என உடல் முழுவம் பலத்த வெட்டு விழுந்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விமல் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அதிகாலையில், அதே பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி பட்டரைவாக்கம் சிவா தலைமையிலான கோஷ்டியில் விமல் இருந்தார். சிவா மீது 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தவேளையில், கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிவாவின் கோஷ்டியில் இருந்து விமல் பிரிந்தார். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதையொட்டி, சிவாவை செல்போனில் தொடர்பு கொண்ட விமல், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவா, விமலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆட்டோவில் அடியாட்களை அனுப்பி, விமலை வீட்டில் இருந்து அழைத்து சென்று கொலை செய்தனர் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிவா உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

2 மாதத்தில் 5 கொலைகள்
செங்கல்பட்டு பகுதியில், கடந்த 2 மாதத்தில், பாலூர் பழைய சீவரத்தில் சிறை துறை போலீஸ், புதுப்பாக்கத்தில் சேகர், மறைமலைநகரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்த வாலிபர், சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த குண்டுபாபு, நேற்று முன்தினம் விமல் என 5 கொலைகள் நடந்துள்ளன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சேலம் அருகே மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர்

Next Post

தயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Next Post

தயாரிப்பாளர் சங்க தேர்தல்-போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version