தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம்!!

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம்!!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட கணித ஆசிரியர் எழுதிவைத்த கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவியின் கணித ஆசிரியர் சரவணன் திருச்சி அருகேயுள்ள மாமனார் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். திருச்சி துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன்பு சரவணன் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள ஆசிரியர். “எனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை, ஏன் இப்படி கூறுகிறார்கள். மாணவர்கள் என்னை தவறாக நினைப்பதால் அவமானமாக இருக்கிறது” என அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதத்தில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *