6 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி தேர்வில் மாஸ்டர் திரைப்படத்தை எழுதிய கட்டுரை : இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

6 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி தேர்வில் மாஸ்டர் திரைப்படத்தை எழுதிய கட்டுரை : இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

6 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி தேர்வில் மாஸ்டர் திரைப்படத்தை எழுதிய கட்டுரை ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்நிலையில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி தேர்வில் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி எழுதிய தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த மாணவன் முதலில் நான் தியேட்டருக்கு சென்ற அனுபவம் பற்றி கூறுகிறேன் என்று ஆரம்பித்து சமீபத்தில் நான் தியேட்டருக்கு மாஸ்டர் திரைப்படத்தை பார்பதற்க்காக சென்றிருந்தேன்.அந்த படம் மிகவும் சூப்பராக இருந்தது அதை நான் ரசித்தேன். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாஸ்டர் ஜேடி எப்படி உதவுகிறார் என்பதை அந்த படத்தில் மிகவும் அழகாக காண்பித்து இருந்தார்கள்.

மிகவும் முக்கியமாக அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் இன்றளவும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த படத்தை மீண்டும் ஒருமுறை எனது நண்பர்களுடன் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த மாணவன் எழுதிய கட்டுரை புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *