Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் மற்றும் இரு மகள்களின் சடலங்கள் … போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்

October 9, 2021

கோவில்பட்டியில் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய், இரு மகள்கள் என 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியினருக்கு யுவராணி(21), நித்யா(17) என்ற 2 பெண் பிள்ளைகள் இருந்தனர். யுவராணி கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நித்யா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரி தனது கணவர் முத்துராமனை பிரிந்து தனது 2 பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடியதாக பாடகர் சரவெடி சரண் கைது!!

திருச்சி போலீஸ் கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது… ரகசிய இடத்தில் தீவிர விசாரணை!!

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

இந்த சூழ்நிலையில் முத்துமாரிக்கும், அவரது சகோதரர் ஆண்டவர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இது குறித்து முத்துமாரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முத்துமாரி குடும்பத்திற்கு அவரது சகோதரர் ஆண்டவர் அடிக்கடி சொத்து பிரச்னை தொடர்பாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலையில் முத்துமாரியின் தாய் கோமதி, வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து  அதிகளவில் துர்நாற்றம் வீசியதால், அருகில் இருந்தவர்களிடம்  உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது வீட்டின் முன்பகுதியில் யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் நித்யாவின் கால்சட்டை இல்லாமல் இருந்தார். வீட்டின் சமையல் அறை பகுதியில் முத்துமாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை பார்த்து , அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துப்பிரச்னை காரணமாக 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா இல்லை பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

போதையில் மிதக்கும் பாலிவுட்.. சிக்கிய தயாரிப்பாளரால் அதிர்ந்த திரையுலகம்.. இன்னும் எத்தனை பேர் மாட்ட போறாங்களோ?

Next Post

சொந்த பையனையே ஒழுங்கா வளர்க்க முடியல… பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் விளம்பரத்தில் இருந்து தூக்கப்பட்ட ஷாருக்

Next Post

சொந்த பையனையே ஒழுங்கா வளர்க்க முடியல… பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் விளம்பரத்தில் இருந்து தூக்கப்பட்ட ஷாருக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version