பெரியார், வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்காலத் தடை… மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…

பெரியார், வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்காலத் தடை… மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பெரியார், வைகை மதகுகளை இடிக்க இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேலூரைச் சேர்ந்த மாதவன், மாரிமுத்து ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பெரியார் வைகை கால்வாய் மதகு
மதுரை, மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் 12-வது பெரியார் வைகை கால்வாய் மதகு உள்ளது. இந்த மதகுகள் வழியாக பத்துக்கு மேற்பட்ட கிளை கால்வாய்கள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
இப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. நான்கு வழிச்சாலைக்காக 12-வது பெரியார் வைகை கால்வாய் மதகை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயம் பாதிப்பு
இதனால் மேலூர் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் நலனுக்காக தண்ணீர் செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்த பிறகு, மதகுகளை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை கீழையூர் 12வது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இடைக்காலத் தடை, இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் 12வது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிக்க இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக். 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *