பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய இளைஞர் : வைரல் வீடியோ

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய இளைஞர் : வைரல் வீடியோ

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய இளைஞர் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபுராஜ். கோழிக்கூடு அருகே உள்ள வடகரையில் செயல்பட்டு வரும் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அதற்காக வங்கியின் வெளியில் உள்ள பால்கனியில் நின்று கொண்டிருந்தார். அவரை போல் பலரும் அவரின் அருகில் பால்கனியில் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது திடீரென அருகில் இருந்த நபர் தலைகீழாக பின்னோக்கி பால்கனியில் இருந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே சுதாரித்து கொண்ட பாபுராஜ் சட்டென்று தலைகீழாக விழுந்த நபரின் காலை பிடித்து விட்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மேலே தூக்கி காப்பாற்றியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பலரும் பாபுராஜ் நொடிப்பொழுதில் சாமர்த்தியமாக செயல்பட்டதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *