மல்யுத்தம், சினிமாவை தொடர்ந்து ‘தி ராக்‘கின் அடுத்த இலக்கு : மக்கள் விரும்பினால் தயார் என அறிவிப்பு!

மல்யுத்தம், சினிமாவை தொடர்ந்து ‘தி ராக்‘கின் அடுத்த இலக்கு : மக்கள் விரும்பினால் தயார் என அறிவிப்பு!

மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என மல்யுத்த வீரரும் ஹாலிவுட் சினிமா நடிகருமான தி ராக டுவைன்சன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

டுவைன்சன் ஜான்சன் என்று சொல்வதை விட தி ராக் என்று சொன்னால் சின்னக்குழந்தையும் யார் என்றும் சொல்லும். அந்தளவுக்கு மல்யுத்த வீரராக வலம் வந்த தி ராக், பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையில் பேட்டி ஒன்று அளித்த அவர், மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என்றும், மக்களின் ஆதரவு நிச்சயம் அவசிய என கூறியுள்ளார்.

அமெரிக்காவை மக்களையும் ஒன்றிணைப்பது தனது குறிக்கோள் என தெரிவித்த தி ராக், மக்கள் விரும்பினால் தயங்காமல் செய்யத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அவர் எந்த கட்சிக்காக போட்டியிடுவார் என்பதை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் உள்ள பிரபலங்கள் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் குதித்து வருகின்றனர். குறிப்பாக அர்னால்ட், ரீகன், ட்ரம்ப் வரிசையில் தற்போது ராக் சேருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *