போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி ராம்நகரை 17 வயது சிறுமி கடந்த 30ம் தேதி திடீரென மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆவடி காமராஜர் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த விக்ரம் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் தேடுவதை அறிந்து விக்ரம் சிறுமியுடன் ஆவடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர். விசாரணையில் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் விக்ரமை போக்சோவில் கைது செய்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *