Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

ஒயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸ் தொல்லையா?இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்!!

Jenifer James by Jenifer James
August 25, 2020 1:31 PM GMT+5:30 - Updated on August 26, 2020 12:11 PM GMT+5:30
ஒரு சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என அழைக்கிறோம். ஒரு சிலருக்கு கருமையாக இருக்கும். இதை கரும்புள்ளிகள் அல்லது பிளாக் ஹெட்ஸ் என்கிறோம். இந்த ஒயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸை போக்குவதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

ஒயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸால், சருமத்தின் மென்மைத்தன்மையை இழப்பதோடு, அந்த இடமும் சற்று அசிங்கமாக காணப்படும். பலரும் குளித்து முடித்ததும், காட்டன் ஈரத்துணியைக் கொண்டு வெள்ளைப்புள்ளிகளைப் போக்க தேய்ப்பார்கள். ஆனால் இப்படி செய்வதால் மட்டும் மூக்கை சுற்றி வரும் புள்ளிகளை நீக்க முடியாது என்று அழகுக்கலை நிபுணர் கூறுகிறார். மேலும் இதற்கு முக்கியக் காரணம், சரும துளைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தானாம். அதற்கான தீர்வுகள் என்னவென்றும் அவர் சொல்கிறார். இதைக் கடைப்பிடித்தாலே போதும், இது உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்வதோடு, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.

வால்நட்ஸ் பொடி

புதிய வடிவ தொழில்நுட்பம் : பேஸ்மாஸ்கை கண்டுபிடிக்கும் கண்காணிப்பு கேமரா

இலங்கைக்கு கடத்திய 6 டன் மஞ்சள்…

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள்

ஒரு கிண்ணத்தில், ஒரு கையளவு வால்நட்ஸை பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி, அதை நேரடியாக முகத்தில் மசாஜ் செய்து வந்தால் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

பச்சை பயறு மாவு

பச்சை பயறு மாவை தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வர, மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

க்ரீன் டீ மற்றும் தேன்

க்ரீன் டீ பொடியுடன், தேன் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து, மூக்கில்  தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்  குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகளை அகற்றலாம்

வேர்க்கடலை மற்றும் பால்

வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, மூக்கின்  மேல் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவி வர, கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவோடு காணப்படும்.

ஓட்ஸ் மற்றும் பட்டைத் தூள்

ஓட்ஸ் பொடியுடன் மற்றும் பட்டைத் தூள் தலா 1 டீஸ்பூன் எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சருமத்துளைகளை விரிவடையச் செய்து, சுத்தம் செய்து, வெள்ளைப்புள்ளிகளை எளிதில் அகற்ற உதவுகிறது.

பேக்கிங் சோடா மற்றும் பால்

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு பால் சேர்த்து, நன்றாகக் கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வாங்க. அப்புறம் நீங்களே ஆச்சரியப்படும் விதமாக, வெள்ளைப்புள்ளிகள் மட்டுமின்றி, சருமத்துளைகளும் சரியாகும்.

எலுமிச்சை சாறு

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறைக் காட்டனில் நனைத்து, வெள்ளைப்புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் வெள்ளைப்புள்ளிகள் காணாமல் போய் விடும்.

ஆரஞ்சு தோல் பொடி மற்றும் பால்

1 டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், மூக்கில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை

வேம்பு இலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் மறையும்.

தேன்

வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவி வர, நாளடைவில் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.

அரிசி மாவு

ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், சம அளவில் மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு தண்ணீரை அவ்விடத்தில் தெளித்து மீண்டும் ஸ்கரப் செய்து கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் அகலும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நெஞ்சு வலி காரணமாக வனிதா கணவர் பீட்டர் பால் மருத்துவ மனையில் அனுமதி…

Next Post

ஊதியக் குறைப்பு செய்த முதலாளியை கொலை செய்த தொழிலாளி…

Next Post

ஊதியக் குறைப்பு செய்த முதலாளியை கொலை செய்த தொழிலாளி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version