Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

உங்க கூட இதே அக்கப்போரா போச்சு… ஸ்டேட் பேங்கால் கொந்தளித்த சு.வெங்கடேசன்!

September 23, 2021

SBI வங்கி கட் ஆப் விவகாரத்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்பாக எம்.பி. சு.வெங்கடேஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020 ல் இருந்து இந்த பிரச்சினை குறித்து நிதி அமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறேன். அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது.

27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக எனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன. ஆகவே பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும்.

நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கை தேவை – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

மீண்டும் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால் இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓ. பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆப் க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீட்டு நெறி முறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும். இப் பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்வதை முழுவதும் வீடியோ எடுத்த கணவன்!!!

Next Post

மகான் திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

Next Post

மகான் திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version