இக்காலத்திய மிகப்பெரிய கண்டுபிடிப்பான கணினியை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருந்தவர், Charles Babbage. இவர் கணிப்பொறியின் தத்துவங்களை கண்டுபிடித்தார். இவர், தான் கண்டுபிடித்தப் பொறிக்கு Analytical Engine எனப் பெயர் வைத்தார். இவர் கண்டுபிடித்த அனைத்தும், கொள்கை அளவில் செயல்படக் கூடியதாய் இருந்தது. ஆனால் அப்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அவர் நினைத்ததை உருவாக்க முடியவில்லை. நேரமும், பணமும் செலவானதே மிச்சம்.
1937-ல் Howard H Aiken என்பவர், கணிப்பொறி எந்திரத்தை உருவாக்க முயன்றுக் கொண்டிருந்தார். அவருக்கு Babbage-ன் கருத்துக்கள் பலவாறு உதவின. இவருக்கு முன்னமே, பிரெஞ்ச் கணித மேதையும், விஞ்ஞானியுமான பாஸ்கல், ஒரு Mechanical adding Machine-ஐ கண்டுபிடித்திருந்தார். இதைப்போல, மேலும் பல விஞ்ஞானிகள் Babbage-க்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
பெஞ்சமின், பெட்ஸி ஆகியோருக்கு, நான்காவதாக இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1791-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிறந்தார், Charles Babbage. 1810-ல் கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர்ந்த Babbage, அங்கு கணிதம் தேர்வு செய்து, அதில் முதல் மாணவராகவும் திகழ்ந்தார். 1814-ஆம் ஆண்டு, அவரது ஆய்வுக்கட்டுரையைக் கண்டு, தேர்வு எழுதாமலேயே அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் 1815-ல் Royal Instityute of Astronomy-ல் விரிவுரையாளராக பணிபுரிந்தார்.
1825-ல் ஹெர்ஷல் என்பவருடன் இணைந்து, மினியக்கவியல் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தார். பின்னர், அது Michael Faraday-வினால் விரிவாக ஆராயப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்கான Astronomical Society-ஐ தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்தார், Babbage. அங்கு தான் அவரால், Difference Engine எனப்படும் முதல் கணிப்பொறி கண்டுபிடிக்கப்பட்டது.
கணிப்பொறியியல் மட்டுமல்லாமல், Cryptography எனப்படும் இரகசிய தகவல் பறிமாற்ற முறையிலும் கைதேர்ந்தவராக இருந்தார். தகவல்களை வேறு விதமாக மாற்றி, அதனை பெறுநர் பெற்ற பின், அவரிடம் உள்ள இரகசியக் குறிப்புகளை வைத்து, தகவல்களை அறிந்துக் கொள்ளலாம். கிரீமிய போரின் போது, தங்கள் எதிரி நாட்டின் தகவல்களை எளிதாக புரிந்துக்கொள்ளும் முறையை கண்டுபிடித்தார்.
இவரால் முழுமையாக முடிக்கப்படாவிட்டலும், இவரது கணிப்பொறியே உலகின் முதல் கணினியாக கருதப்படுகிறது. அதற்கு காரணம், இவர் பின்பற்றிய கோட்பாடுகளே, இன்று வரையிலும் கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவரது மூளை பதப்படுத்தப்பட்டு, ஒரு பகுதி லண்டன் அருங்காட்சியகத்திலும், மற்றொரு பகுதி Hunterian அருங்காட்சியகத்திலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
நிலவில் உள்ள ஒரு இடத்திற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் பலக் கல்லூரிகளும், வளாகங்களும் உலகம் முழுவதும் உள்ளன.
1814-ல் Georgiana Whitmore என்பவரை திருமணம் செய்துக்கொண்டார், Babbage. அவருக்கு 8 குழந்தைகள். 1871-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி, தன் 79-ஆம் வயதில் காலமானார், Charles Babbage. இவர், லண்டனில் உள்ள Kensal Green Cemetery-ல் புதைக்கப்பட்டார்.