உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வியானது இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை, பல முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தங்கள் கருத்துக்களை கூறி இருக்கின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாமிபியன்ஷிப்ன் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி தொடங்க இருக்கிறது. இதற்காக வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரையிலும் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட திட்டம் போட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- June 12, 2023 11:30 PM GMT+5:30
0
1
Less than a minute
You can share this post!
author
Related Articles
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: மூன்றாவது டி20-யில் பந்துவீச்சு தேர்வு!
- October 27, 2026 12:33 PM GMT+5:30
226 ரன்களைத் துரத்தி இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய…
- October 22, 2026 5:46 PM GMT+5:30
ஆசிய பாரா விளையாட்டு: போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்ற தீப்தி…
- October 20, 2026 12:17 PM GMT+5:30

