அடுத்தடுத்து 2 சதம்!! தவானின் அடேங்கப்பா சாதனை…

அடுத்தடுத்து 2 சதம்!! தவானின் அடேங்கப்பா சாதனை…
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரருமான ஷிகர் தவான், புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

யு.ஏ.இ.-யில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின.

நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சிறப்பான சதம் விளாசி கலக்கினார்.

இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *