அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால் பதிக்கிறார் நடிகர் ஷாருக்கான்…

அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால் பதிக்கிறார்  நடிகர் ஷாருக்கான்…
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நைட் ரைடர்ஸ் அணிகளின் உரிமையாளராக உள்ள நடிகர் ஷாருக்கான் கால் பதிக்கிறார்.

அமெரிக்கா:

அமெரிக்க நாட்டில் கிரிக்கெட்டை பிரபல படுத்த மேஜர் லீக் கிரிக்கெட் என்ற தொடரில் 6 அணிகள் பங்கேற்க உள்ளது.இந்த டி-20 கிரிக்கெட் தொடரானது வரும் 2022 நடக்க திட்டமிடப்பட்டள்ளது.இதற்கான தொடக்க வேலைகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் உரிமையாளராக செயல்படும் தி நைட் ரைடர்ஸ் நிறுவனம் இந்த அமெரிக்க தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.இதற்காக அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் நைட் ரைடர்ஸ் குழுமம் தொடரின் வளர்ச்சிக்கும், அதை முன்னெடுத்து செல்லவும் தயாராக உள்ளது. மேலும் நைட் ரைடர்ஸ் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து நைட் ரைடர்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், ‘அமெரிக்காவில் அடுத்த சில ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்க திட்டமிட்டு அங்கு சர்வதேச போட்டிகளையும், உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளையும் அமெரிக்கா நடத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாகும். இங்கு விளையாடுவதற்கான நல்லசூழல் நிலவுகிறது’ என்றார்.

ஏற்கனவே நைட் ரைடர்ஸ் குழுமம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவையும், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ அணியையும் வழிநடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *