இந்திய பெண்கள்… டி 20 கிரிக்கெட் அணியின் …கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா…!!!

இந்திய பெண்கள்…  டி 20 கிரிக்கெட் அணியின் …கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா…!!!

இந்திய பெண்கள் டி 20 கிரிக்கெட் அணியின் , கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சமீபத்தில் இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரானது, லக்னோவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்கினார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 32 வயதுடைய ஹர்மன்பிரீத் கவுருக்கு நான்கு நாட்களாக சளி, இரும்பலுடன் லேசான காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதன் காரணமாக அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் கடந்த ஒரு வார காலத்தில், என்னோடு தொடர்பில் இருந்தவர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதேபோலவே கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற தொடரில், சச்சின் டெண்டுல்கர் ,யூசுப் பதான், பத்ரிநாத் மற்றும் இவர்களை தொடர்ந்து ,தற்போது இர்பான் பதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டனர்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *