ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி?

ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி?

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி அவ்வப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளை, நடப்பு ஐபிஎல் தொடர்தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று வதந்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்புடைய விளம்பர நிகழ்ச்சியில் சென்னை கேப்டன் டோனி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர் ஒருவர், டோனியிடம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா…? ஓய்வுக்கான உங்கள் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டோனி, ”ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய காலம் உள்ளது. எங்களுக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. நான் இப்போது ஏதாவது சொல்லிவிட்டால் அது பயிற்சியாளருக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும்” என்று கூறி சிரித்தார். டோனியின் இந்த பதிலை கேட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *