இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி ஆட்டக்காரான ஹர்திக் பாண்டாயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/images-42.jpeg?resize=640%2C480&ssl=1)
இந்தியா அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி ஆட்டக்காரராக இருப்பவர் ஹர்திக் பாண்டாயா பரோடாவை சேர்ந்தவரான இவர் 2015 ஆம் ஆண்டு ஐ பி எல் அணியில் இடம் பிடித்தார் அங்கு அவரின் அதிரடி ஆட்டம் சிறப்பாக அமைய 2016ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/images-43.jpeg?resize=660%2C440&ssl=1)
இந்தியாவில் கபில் தேவ், ராபின் சிங்க்கு அடுத்த படியாக வேகப்பந்து மற்றும் அதிரடி ஆட்டக்காராக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் ஹர்திக் பாண்டாயா இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவர் பெயர் குர்னால் பாண்டாயா இவரும் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக உள்ளார்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/images-40.jpeg?resize=424%2C347&ssl=1)
ஹர்திக்பாண்டாயா தன் நீண்ட நாள் தோழியான “நடாஷா ஸ்டான்கோவிச்”சை காதலித்துவந்தார் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சியதார்தம் “துபாயில்” நடந்தது, விரைவில் திருமணம் நடக்க இருந்தது ஆனால் திருமணம் ஆகுவதற்கு முன்னரே தன் காதலியை கர்ப்பம் ஆக்கினார் “ஹர்திக் பாண்டாயா”
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/images-41.jpeg?resize=554%2C554&ssl=1)
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நடாஷா இன்று “அழகான ஆண்” குழந்தையை பெற்று எடுத்தார். தன் குழந்தையின் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த படம் சமூக வலைத்தளத்தில் “ட்ரெண்ட் “ஆகி வருகிறது.