காமன்வெல்த் போட்டி இந்தியாவிற்கு 2வது தங்கம்

காமன்வெல்த் போட்டி இந்தியாவிற்கு 2வது தங்கம்

பளுதூக்கும் போட்டியில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Image

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்தியா 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியது.

இந்த நிலையில் இன்று நடந்த பளு தூக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட 19வயதான ஜெர்மி லால்ரினுங்கா 67 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 2வது தங்கப்பதக்கம் ஆகும். மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இவர் 300 கிலோ (140 கிலோ + 160 கிலோ) எடையை வெற்றிகரமாக தூக்கி சாதனை படைத்தார்.

Image

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *