செப்டம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

செப்டம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் செப்டம்பர் 12ம் தேதி முதல்  செப்டம்பர் 18ம் தேதி வரை சென்னை ஓபன் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Official Site of the 2022 US Open Tennis Championships - A USTA Event

சென்னையில் 1997ம் ஆண்டு முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன. பிறகு, இந்த போட்டிகள் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், மகளிர் பங்கேற்கும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை செய்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை சோனி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *