சச்சினின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்! அடுத்தடுத்து சாதனை செய்து அசத்தல்…

சச்சினின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்! அடுத்தடுத்து சாதனை செய்து அசத்தல்…

ஜிம்பாவே சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

IND vs ZIM 3rd ODI | சுப்மன் கில் சதம் விளாசல்: ஜிம்பாப்வே அணிக்கு 290  ரன்கள் இலக்கு | indian batter shubman gill slams ton zimbabwe chasing 290  runs in third odi - hindutamil.in

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். முதல் போட்டியில் 82 ரன்களும், இரண்டாவது போட்டியில் 33 ரன்களும், மூன்றாவது போட்டியில் 130 ரன்களையும் குவித்தார். இதன்மூலம் தொடர்நாயகன் விருதையும் பெற்றார். இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதாவது, ஜிம்பாவே அணிக்கு எதிராக அதிக ரன்கள் (130 ரன்கள், சச்சின் 127 நாட் அவுட்) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Image

மேலும், குறைந்த வயதில் (22) ஜிம்பாவே அணிக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு முகமது கைப் 21 வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியலில் சுப்மன் கில் (499*) ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து ஹராரே மைதானத்தில் முதல் போட்டியில் ஒரு நாள் சதம் அடித்த 3வது இந்திய வீரராகவும் திகழ்கிறார். (ரோகித் சர்மா (2010), கே.எல்.ராகுல் (2016)).இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *