ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை

ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

India vs England: James Anderson Could be Rested for Oval Test, Hints Coach

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்  என்ற சாதனையை படைத்தார். இதுவரை டெஸ்டில் 664 விக்கெட்களையும், ஒரு நாள் போட்டியில் 269, டி20யில் 18, என மொத்தமாக 367 போட்டிகளில் 951 விக்கெட்களை எடுத்துள்ளார்.

முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் 1347,ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் 1001, இந்தியாவின் அனில் கும்ப்ளே 956 விக்கெட்களை வீழ்த்தி முதல் 3 இடங்களில் உள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *